இரசனை

இரசிக்கத் தெரிந்தவர் மட்டுமே
இந்த பூமியின் புதல்வர்.
மற்றவரெல்லாம்
பித்தனென்று காண்.

மழையை இரசித்துப்பார்
வானத்தின் வலிதெரியும்
காற்றை இரசித்துப்பார்
காதலின் சுகம் புரியும்

இரசித்தல் ஒரு தவம்
இரசித்தல் ஒரு தியானம்
சின்னச் சின்ன விடயங்களை
இரசித்துப்பாருங்கள்
துரும்பிலும்
கடவுளைக்கானலாம் என்பது புரியும்
ஏன்?...
ரசிகனுக்குக் கல்லே கடவுள் அல்லவா!

இரசனையில் தானே
சாதிகள் சாகின்றன
இரசனை மட்டுமே
மனிதனை அடையாளப் படுத்தும்
ஒரே வார்த்தை

இரசனை .....
துன்பத்திலும் மகிழ்ச்சி தரும்
மந்திர மாத்திரை.
உயிரின் யாத்திரை
உருவாகிய புள்ளியும்
இதுதானே!

வறுமையை ரசியுங்கள்
குடிலும் கோபுரமாகும்
துன்பத்தை ரசியுங்கள்
கண்ணீர் காப்பியமாகும்.
உறவை ரசியுங்கள்
உலகம்  உலகமாய் மாறும்

- மதன் -

posted under | 0 Comments
பழைய இடுகைகள்
MathaN. Blogger இயக்குவது.

எனது கவிதைகளுக்காய் இணையத்தில் கொஞ்சம் நேரம் ஒதிக்கியமைக்கு முதற்கண் நன்றிகள் இவை எனது உயிரோவியத்திற்குப் பின்னான கவிதைகள் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டுப் போங்கள். அன்புடன் மதன்


Recent Comments